அனைத்து கட்சி கூட்டத்தை பாஜவுக்கு பயந்து எடப்பாடி புறக்கணிப்பு: முத்தரசன் பேட்டி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விவசாய விலை பொருட்களுக்கான விலை நிர்ணயம் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என ஒன்றிய அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.

பாஜவின் நிர்பந்தம் காரணமாக குறை சொல்வதற்கு வேறு காரணமில்லாமல் தமிழக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மும்மொழி கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் ஆதரவாக பேசி வருகிறார்.
தமிழக ஆளுநர் மீது உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஆகும். இந்த தீர்ப்பை அனைத்து கட்சியினரும் வரவேற்றுள்ள நிலையில் அதிமுக விழி பிதுங்கி என்ன சொல்வது என தெரியாமல் அமைதியாக நிற்கிறது.

அதிமுக பாஜவோடு சேரும் முயற்சியை அதிமுக எடுக்கிறதோ இல்லையோ பாஜ அந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை திமுக ஒருபோதும் மிரட்டவில்லை. எந்த ஒரு இடத்தில் கூட சீமான் அப்படி சொல்லவில்லை. பாஜவிற்கு தமிழகத்தில் காலூன்ற ஆள் இல்லை என்பதற்காக சீமான் போன்றவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜ இறங்கியுள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிக்கிறார். அதற்கு காரணம் பாஜவுடன் தங்களுக்கு பகை வந்து விடுமோ என்பதற்காக எடப்பாடி புறக்கணிப்பு செய்கின்றார். இவ்வாறு அவர் கூறினார்.

The post அனைத்து கட்சி கூட்டத்தை பாஜவுக்கு பயந்து எடப்பாடி புறக்கணிப்பு: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: