சேலம் அக்னிபாத் வீரர் காஷ்மீரில் உயிரிழப்பு

மேட்டூர்: ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த மேச்சேரியைச் சேர்ந்த அக்னிபாத் வீரரின் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் திப்பரத்தாம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோகுல்சக்தி (21), திருமணம் ஆகாதவர். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அக்னிவீரர் திட்டத்தில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஊட்டியில் பயிற்சி காலம் முடிந்து ஜம்மு காஷ்மீரில் பணியில் சேர்ந்தார். கடந்த 7ம்தேதி இரவு கோகுல்சக்தி இறந்து விட்டதாக ராணுவத்திலிருந்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் இறந்துபோன கோகுல் சக்தியின் உடல் ராணுவ வாகனத்தில் சொந்த ஊரான மல்லி குந்தத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல் போலீஸ் தரப்பிலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொது மயானத்திற்கு கோகுல் சக்தியின் சடலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்திய பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

The post சேலம் அக்னிபாத் வீரர் காஷ்மீரில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: