டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்க ராணுவம் ஏமன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சனா அருகில் உள்ள ஹொடைடா பகுதியில் நேற்று அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். மேலும்,ஏமனின் அம்ரான் மாகாணத்தில் அமெரிக்கா குண்டுவீச்சில் தொலைதொடர்பு கருவிகள் சேதமடைந்தன.
இதன் பின்னர் ஜெபல் நுக்கம், தமார் மற்றும் இப் ஆகிய மாகாணங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர் என்று ஹவுதிகள் தெரிவித்தனர்.
The post ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் 8 பேர் பலி appeared first on Dinakaran.