இதனால் தர்ஷனால் தன்னுடைய வீட்டிற்குள் போக முடியவில்லை என்று இருதரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் நடிகர் தர்ஷனை சிலர் தாக்கியதாகவும், அதே போல் ஆத்திச்சூடியையும் சிலர்
தாக்கியதாகவும் ஈறி தரப்பினரும் புகார் அளித்திருந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி மற்றும் அவரது மாமியார் மகேஸ்வரி ஆகிய இருவரும் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் தர்ஷன் மீதும் உடனிருந்த அவருடைய உறவினர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பத்தூர் நீதிமன்றத்தின் நடிகர் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டார். இதையடுத்து ஜாமீன் கேட்டு 2வது முறையாக தர்ஷன் தரப்பு வழக்கறிஞர்கள் அம்பத்தூர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்நிலையில் இன்று நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன் நாளை வெளியே வருகிறார்.
The post நீதிபதி மகனை தாக்கிய வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்! appeared first on Dinakaran.