கடலூர்: சிதம்பரம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புவனகிரி ஆதிவராநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டரில் தீப்பற்றியது. தகவலை அடுத்து பள்ளிக்கு விரைந்து வந்த கேஸ் நிறுவன ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.