இந்நிலையில் சகோதரிகள் கீர்த்திகா, மேனகாநேற்றிரவு காவல் நிலையத்துக்கு சென்றனர். அங்கு 2 பேரும் அண்ணனை விடுவிக்கும்படி கூறி காவல் நிலையம் முன்பு அடுத்தடுத்து விஷம் குடித்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கீர்த்திகா சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். ஆபத்தான நிலையில் மேனகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post காவல்நிலையம் முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்க கோரி தற்கொலைக்கு முயன்ற 2 சகோதரிகளில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.