தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதக்களை ஆளுனர்ஆர்என் ரவி கிடப்பில் போட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று குத்துக்கல்வலசையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி,
கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன், பேரூர் செயலாளர்கள் மேலகரம், இலஞ்சி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜே.கே. ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், செங்கோட்டை நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன், அழகு தமிழ் சங்கர், சோபனா, முத்துவேல், ஐடிஐ ஆனந்த், அறங்காவலர் சுந்தர்ராஜ், சிவக்குமார், குத்தாலிங்கம், சேர்மராஜ், வேல்சாமி, அறங்காவலர் பூவையா, வசந்த், இஞ்சி இஸ்மாயில், முத்துக்குமார், ராமராஜ், திருநாவுக்கரசு, ரகுமான் சாதத், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசியில் நகர திமுக சார்பில் காந்தி சிலை முன்பு நகர செயலாளர் சாதிர் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மதிமுக மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன், காங்கிரஸ் நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் ஈஸ்வரன், கவுன்சிலர்கள் ரபீக், சுப்பிரமணியன், தேவராஜன், சித்திக், பிரேம்குமார்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் அபூபக்கர், மற்றும் திமுக நகர நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் என்ற கிட்டு, ராம்துரை, பால்ராஜ், ஷேக்பரித், மைதீன் பிச்சை, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் ரஹீம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுமான் சாதத், வழக்கறிஞர் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணிமுகமது ரபி, வட்ட நிர்வாகிகள் சண்முகநாதன், முருகேசன், சோமசுந்தரம், அறங்காவலர் இசக்கிரவி, முருகானந்தம், பழக்கடைகுமார், சன் ராஜா, அமீர், சாரதி முருகன், ராமநாதன், ரெசவு மைதீன், தேவதாஸ், பிரபாகரன், கோதரி, அலி, இளைஞரணி முரளி, அருண், ஆபிரகாம், தினேஷ், காமில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை: செங்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் புளியரையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை வகித்தார்.
திமுக பொது குழு உறுப்பினர் ரஹீம் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், மகளிரணி மேரி, கல்யாணி, புளியரை ஊராட்சி மன்ற தலைவர் ஐயா, துணைத்தலைவர் லட்சுமி, செங்கோட்டை யூனியன் சேர்மன் திருமலை செல்வி, சுப்புராஜ், புதூர் பேரூர் செயலாளர் கோபால், கிளை செயலாளர் பிச்சையா,
ஆறுமுகம், மணி, இசக்கிமுத்து, சாமி, முத்துகுமார், கருப்பசாமி, கணியப்பா, மணிகண்டன், ஆதிதிராவிட நலக்குழு ஒன்றிய அமைப்பாளர் வைரமணி, பரமேஷ்வரன், முப்புடாதி, மாரியப்பன், முருகன், இளைஞரணி துணை அமைப்பாளர் நிர்மல் கிருஷ்ணராஜ், ஒன்றிய இளைஞரணி சரவணகுமார், சுரேஷ், சலீம்மாலிக், பாலமுருகன், இசக்கிதுரை, சந்தோஷ், அணி அமைப்பாளர் அந்தோணி, மகளிர் அணி லட்சுமி, அனிதா, சத்தியபாமா, சுனிதா, பவானி, இசக்கிமுத்து சிதம்பரம், வி.சி.க.செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ், மணிகண்டன், வனராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்: தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆலோசனையின் படி சங்கரன்கோவில் நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர அவைத்தலைவர் முப்பிடாதி முன்னிலை வகித்தனர். இதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் வகையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட பிரதிநிதி டைட்டஸ் ஆதித்தன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி கேபிள் கணேசன், மாணவரணி வீரமணி, வார்டு செயலாளர்கள் தங்கவேலு, கோமதிநாயகம், தடிகாரன், ராமலிங்கம், வீராசாமி, பழனிச்சாமி, தொண்டரணி ராஜவேல் ரத்தினம், ஐடி விங் சிவாஜி மற்றும் நிர்வாகிகள் வெங்கடேஷ், அப்துல்ரகுமான், மணிகண்டன், சதீஷ், வைரவேல்,ஜான்சன், கவுன்சிலர் விஜய்குமார், சங்கர்ராஜ், ஜெயகுமார், பழனிவேல்ராஜன், மாதேஷ், குமாஸ்தா முருகன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு ஆளுனர் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.