யூனிட் ரயில்கள் பகுதி நிறுத்தம்; காட்பாடி யார்டில் பராமரிப்பு பணிகள்

வேலூர், ஏப்.9: காட்பாடி ரயில் நிலைய யார்டில் நடந்து வரும் பராமரிப்புப்பணிகள் காரணமாக 3 மெமு பாசஞ்சர் ரயில்கள் பகுதி மற்றும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, விழுப்புரத்தில் இருந்து இவு 7.10 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை, திருவண்ணாமலை, போளூர், கண்ணமங்கலம், வேலூர் கன்டோன்மென்ட் வழியாக காட்பாடிக்கு இரவு 11 மணியளவில் வந்தடையும் வண்டி எண் 66026 விழுப்புரம்-காட்பாடி மெமு பாசஞ்சர் யூனிட் ரயில் இன்று 9ம் தேதியும், 11ம் தேதியும் வேலூர் கன்டோன்மென்ட் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணியளவில் புறப்பட்டு ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திருநின்றவூர், புட்லூர், திருவள்ளூர், ஏகாட்டூர், கடம்பத்தூர், செஞ்சி பனம்பாக்கம், மணவூர், திருவாலங்காடு, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 11.40 மணிக்கு வந்தடையும் வண்டி எண் 66033 சென்னை பீச்-திருவண்ணாமலை மெமு பாசஞ்சர் யூனிட் ரயில் நாளை 9 மற்றும் 11ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு போளூர், கண்ணமங்கலம், வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், சென்னை கடற்கரை, கோட்டை, எழும்பூர் வழியாக காலை 10.56 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வண்டி எண் 66034, நாளை 10 மற்றும் 12ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post யூனிட் ரயில்கள் பகுதி நிறுத்தம்; காட்பாடி யார்டில் பராமரிப்பு பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: