வக்பு சட்டத்தை திரும்ப பெறக்கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஏப்.9: ராமநாதபுரத்தில் வக்பு சட்ட மசோதாவை கண்டித்து விசிக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில்,வக்பு சட்ட மசோதாவை கண்டித்தும், வக்பு சட்ட மசோதாவை திரும்ப பெற வழியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் அற்புதக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ரமே. பிரபாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பாண்டித்துரை, மாவட்ட துணைச் செயலாளர்கள் மீரான் முகைதீன், சுப்பிரமணியன், மனோகரன் முன்னிலை வகித்தனர். மண்டலத் துணைச் செயலாளர் சேகரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பரமக்குடி தொகுதி செயலாளர் சதானந்தன், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் யோசேப்பு, திருவாடானை சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிக்குமார், மேலிட பொறுப்பாளர் மாலின் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, ஜமாத் உலமா சபை, மகளிர் விடுதலை இயக்கம், இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை, சமூக நல்லிணக்க பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் நகர் பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

The post வக்பு சட்டத்தை திரும்ப பெறக்கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: