பாஜ தலைவர் யார்? எல்.முருகன் பேட்டி

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று மதியம் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கும் பகுதியை நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவரிடம் காஸ் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை பொருத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது’ என்றார். தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நியமனம் குறித்து கேள்வி கேட்டபோது பதிலளிக்காமல் சிரித்தபடி சென்றார்.

The post பாஜ தலைவர் யார்? எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: