கொல்கத்தா: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரண் 87*, மிட்செல் மார்ஷ் 81, மார்க்ராம் 47 ரன்கள் எடுத்தனர்.
கொல்கத்தா அணியில் ஹர்ஷித் ராணா 2, ரஸ்ஸல் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். தொடர்ந்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரஹானே 61, வெங்கடேஷ் ஐயர் 45, ரிங்கு சிங் 38* ரன்கள் எடுத்தனர்.
The post ஐபிஎல் டி20: 4 ரன்கள் வித்தியாசத்தில் KKR அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி appeared first on Dinakaran.