கொசூர் அருகே தார்சாலை அமைக்கும் பணி

*எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

தோகைமலை : கொசூர் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டி காலனி, தந்திரிப்பட்டி பகுதியில் பழுதான சாலையை, பலப்படுத்தும் விதமாக புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டி காலனி, தந்திரிப்பட்டி கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பழுதான சாலையை பலப்படுத்தும் விதமாக, புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி போத்துராவுத்தன்பட்டியில் இருந்து கொசூர் ஊராட்சிக்கு முக்கியசாலை செல்கிறது.

இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது பழுதாகி இருந்தது. இதனால் போத்துராவுத்தன்பட்டி- கொசூர் சாலை முதல் அய்யம்பாளையம் வழியாக குப்பமேட்டுப்பட்டி காலனி, தந்திரிப்பட்டி வரை செல்லும் பழுதான தார்சாலையினை பலப்படுத்து விதமாக புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று குளித்தலை எம்எல்ஏ மாணிக்கதிடம் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கை குறித்து தமிழ்நாடு மின்சாரம், மதுவலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் மாவட்ட நிர;வாகத்திற்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் போத்துராவுத்தன்பட்டி- கொசூர் சாலை முதல் அய்யம்பாளையம் வழியாக குப்பமேட்டுப்பட்டி காலனி, தந்திரிப்பட்டி வரை செல்லும் பழுதான தார்சாலையினை பலப்படுத்து விதமாக நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் 2024-2025 ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.2 கோடியே 8 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.

இதனையடுத்து இதற்கான அடிக்கல்நாட்டு விழா கிருஷ்ணராயபுரம் ஒன்றிய ஆனையர் முருகேசன் தலைமையில் நடந்தது. கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய பொருப்பாளர் கரிகாலன், ஒன்றிய துணைச் செயலாளர் மற்றும் மத்தகிரி ஊராட்சி முன்னால் தலைவர் தங்கராசு, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மற்றும் மக்கள் நல பணியாளர் பழனிச்சாமி, முன்னால் இளைஞரணி செல்வம் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு போத்துராவுத்தன்பட்டி-கொசூர் சாலை முதல் அய்யம்பாளையம் வழியாக குப்பமேட்டுப்பட்டி காலனி, தந்திரிப்பட்டி வரை செல்லும் பழுதான தார்சாலையினை பலப்படுத்து விதமாக புதிய தார்சாலை அமைக்க அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கொசூர் மற்றும் குப்பமேட்டுப்பட்டி காலனி, தந்திரிப்பட்டி பகுதி திமுக நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கொசூர் அருகே தார்சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: