தென்காசி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம் அரசுத்துறைகளின் திட்டமிடலால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம்

தென்காசி : தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறையினரின் சரியான திட்டமிடலால் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்து சென்றனர்.

கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 3ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 4ம் தேதி காலையில் விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலையில் முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

5ம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. 6ம் தேதி காலையில் நான்காம் காலயாக சாலை பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, மாலையில் ஐந்தாம் காலயாக சாலை பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. ெதாடர்ந்து நேற்று கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் நடந்தன.

கும்பாபிஷேகத்திற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதை சமீபத்தில் சங்கரன்கோவில் நடைபெற்ற கும்பாபிஷேகம் மூலம் அறிந்திருந்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கூடுதல் கவனம் செலுத்தி முன்கூட்டியே திட்டமிட்டனர்.

இதற்காக தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் தலைநகரான தென்காசியில் போக்குவரத்து பாதிக்கப்படாத அளவிற்கு தென்காசியை சுற்றி புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டிருந்தது.

புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் ஆசாத் நகர் பகுதியில் இருந்தும் குற்றாலம் செங்கோட்டை பகுதியில் இருந்தும் வருகின்ற வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியாக இடவசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் கோயிலுக்கு மிக அருகில் பழைய பரதன் தியேட்டர் வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் 4 புறங்களில் இருந்தும் கோயில் அருகில் பக்தர்கள் பொதுமக்களை அழைத்து வருவதற்கு வருவதற்கு பள்ளி பேருந்துகளை பயன்படுத்தி பக்தர்களுக்கு சிரமமின்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களில் கோயில் வளாகத்திற்குள் அதிகமான எண்ணிக்கையில் பாஸ் மூலம் அனுமதிக்கப்படுவதால் இடநெருக்கடி ஏற்படுவது வழக்கம். இந்த முறை பாஸ் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை மூலம் கோயில் மேற்கூரையில் எவ்வளவு நபர்களை அனுமதிக்கலாம் என்று ஆய்வு செய்து அறிக்கை பெறப்பட்டு சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி ஆகிய இரு சன்னதிகளின் மேற்கூரைகளிலும் குறைந்த அளவு பாஸ் மட்டுமே வழங்கப்பட்டது.

பாஸ் வழங்கப்பட்ட நபர்கள் வடக்கு மாட வீதியில் உள்ள வாயில் வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டு தெற்கு மாட வீதி வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் கும்பாபிஷேகம் நடைபெற்ற சமயத்தில் கோயில் பிரகாரத்தில் பெருமளவு கூட்ட நெருக்கடி தவிர்க்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அட்மின் பழனி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு, கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ் குமார், தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார், நீதித்துறை நடுவர் பொன்பாண்டி, செங்கோட்டை நீதித்துறை நடுவர் சுனில்ராஜா, டிஆர்ஓ ஜெயச்சந்திரன், ஆர்டிஓ லாவண்யா, முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ரமணா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகேசன், புவிதா, ஷீலாகுமார், மூக்கன், தொழிலதிபர்கள் காளிதாசன்,

அழகர்ராஜா, வெங்கடேஷ் ராஜா, ராஜேஷ் ராஜா, இன்டேன் ரவிராஜா, ராசா கன்ஸ்ட்ரக்சன் ரவிச்சந்திரன், சிவகாசி வைரமுத்து, டிரஸ்சில் மேலாளர் கங்காதரன், பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், உறுப்பினர்கள் அழகப்பபுரம் கணேசன், இசக்கி, சுமதி, பாப்பா, கவுன்சிலர் கண்ணன், மலையான் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் இசக்கிரவி, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் செங்கோட்டை ரஹீம், யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, நகர்மன்ற தலைவர்கள் வள்ளிமுருகன், மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், யூனியன் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், குத்துக்கல்வலசை பஞ். தலைவர் சத்யராஜ், ஒன்றிய செயலாளர்கள் வல்லம் திவான் ஒலி,

அழகுசுந்தரம், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, இலஞ்சி முத்தையா, குற்றாலம் குட்டி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் வேணி வீரபாண்டியன், சின்னத்தாய் சண்முகநாதன், துணைத் தலைவர் ஜீவானந்தம், அரசு வழக்கறிஞர் வேலுச்சாமி, திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் ஹனிப், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் கோமதிநாயகம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் பாலாமணி, துணை அமைப்பாளர் மோகன்ராஜ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சங்கரன் வாத்தியார், வார்டு செயலாளர் சாரதி முருகன், கவுன்சிலர்கள் சிந்தாமணி முருகன், சுமதி இசக்கிரவி, ஆசிக் மூபினா சன் ராஜா, சுப்பிரமணியன், அரசு ஒப்பந்ததாரர் மோகன், சபரிமெஸ் சங்கர், சன் ராஜா, பாஜ ஒன்றிய அரசின் நலத்திட்டங்களை பிரிவு மாநில செயலாளர் மருதுபாண்டியன், தென்காசி பாஜ நகர தலைவர் சங்கரசுப்பிரமணியன்,

மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் கருப்பசாமி, நகர துணை தலைவர் கவுன்சிலர் லட்சுமண பெருமாள், மேலகரம் கவுன்சிலர் மகேஸ்வரன், மாவட்டத் துணைத்தலைவர் முத்துக்குமார், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன், ரோஹித்ராம், கிருத்திக்கிராம், அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், நகரச் செயலாளர் சுடலை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கார்த்திக் குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திருமலைக்குமார், தென்காசி வடக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் வேம்பு ரவி, கூட்டுறவு மாரிமுத்து, முத்துக்குமாரசாமி,

ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்களின் சேர்மன் மணிமாறன், பத்மாவதி மணிமாறன், செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் புதிய பாஸ்கர், வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் வேல்முருகன், முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் அண்ணாதுரை, செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் மாரியப்பன், ஆடிட்டர் நாராயணன், கவுன்சிலர் ஆனந்த பவன் காதர் மைதீன், அமமுக தெற்கு மாவட்டச்செயலாளர் அருணகிரி சாமி, நகர செயலாளர் வில்சன், இளைஞர் அணி அருணா, ஓபிஎஸ் அணி தென்காசி தெற்கு மாவட்டச்செயலாளர் கணபதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்,

செயலாளர் சந்திரமதி ராஜா, பொருளாளர் முகமது இப்ராஹிம், இளைஞரணி அமைப்பாளர் காளிமுத்து, வியாபாரிகள் நலச் சங்கத்தலைவர் பரமசிவன், ஸ்ரீலட்சுமி லாலா வேலு, ஆபிதா ஜுவல்லரி முகமது அமானுல்லா, அக்னி கம்ப்யூட்டர் முத்துக்குமார், சுப்ரபாதம் பால் நிறுவனம் ஐயப்பன், ராஜ் மெஸ் ரமேஷ், பரம கல்யாணி ஜுவல்லரி ராமகிருஷ்ணன், ஜிவிஆர் கண் மருத்துவமனை டாக்டர் விக்னேஷ், நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி, கணேஷ், விவேக் ராஜா உள்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்று தரிசித்தனர்.

ராஜகோபுரத்தை வட்டமிட்ட கருடன்

காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை காண நேற்று காலை முதலே தென்மாவட்ட பக்தர்கள் திரண்டு வந்த நிலையில் காலை 8.30 மணியளவில் ராஜகோபுரத்தின் மீது ஒரு கருடனும், மேற்குப் பகுதியில் ஒரு கருடனும் வட்டமிட்டன.

இதைப் பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். ராஜகோபுரத்தை கருடன் தொடர்ந்து வட்டமிடுவதை கண்ட பக்தர்கள் அனைவரும் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என முழங்கியவாறு வழிபாடு செய்தனர்.

தீயணைப்புத்துறையினர் சிறப்பு ஏற்பாடு

கும்பாபிஷேகத்தையொட்டி நான்கு ரத வீதிகளிலும் தலா ஒரு தீயணைப்பு வாகனம், 5 மருத்துவ குழுவினர் மற்றும் 4 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான சிறப்பு உபகரணங்களுடன் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பக்தர்களுக்கு வெயில் மற்றும் உடல் சோர்வு காரணமாக ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

முக்கிய பிரமுகர்கள் நின்று பார்வையிட வசதி

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி ஆகிய இடங்களில் உபயதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நின்று பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்கூரையில் தடுப்பு சுவர் எதுவும் இல்லாதது உடன் சாய்வு தளமாக இருந்ததால் பாதுகாப்பு கருதி, கம்புகள் மூலம் சுற்றிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பக்தர்களுக்கு தீர்த்தம்

திருக்கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக வழிவகை செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகம் முடிந்ததும் விமானத்திலிருந்து பக்தர்கள் மீது தீர்த்த நீர் தெளிக்கப்பட்டது.

8 இடங்களில் எல்இடி திரை அமைப்பு

கும்பாபிஷேக விழாவை காண்பதற்கு வசதியாக 8 இடங்களில் பெரிய அளவில் எல்இடி திரை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ‘டிஸ்ட்ரிக்ட் கலெக்டர்’ தென்காசி என்ற யூ ட்யூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நகராட்சி தனி கவனம்

தென்காசி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத்தலைவர் கேஎன்எல் சுப்பையா, ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், பொறியாளர் ஹசீனா, உதவிப் பொறியாளர் ஜெயப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் கும்பாபிஷேகத்திற்கு முதல் நாளே நகர் முழுவதும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களை வைத்து துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நகரின் ரத விதிகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதிகள் தேவையான இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 10 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி மூலமும், ஆறு இடங்களில் தண்ணீர் லாரி மூலமும் விநியோகம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. கோவில் முன்பு 300 தண்ணி கேன்கள் வைக்கப்பட்டிருந்தது.

20 இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதியும் செய்யப்பட்டிருந்தது. குப்பைகளை சேகரிக்க 50 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. 7 வாகனங்கள் குப்பை சேகரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மின்வாரியம் விழிப்புணர்வு

நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி மேற்பார்வையில் தென்காசி கோட்ட செயற்பொறியாளர் திருமலைகுமாரசாமி தலைமையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டு பொதுமக்களிடையே மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உதவி செயற்பொறியாளர்கள் கலா, உதவி மின் பொறியாளர்கள் ராஜேஸ்வரி, ஷேக்முகமதுபரூக், மாடசாமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உபசரிப்பு மழையில் நனைந்த பக்தர்கள்

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை காண நேற்று அதிகாலை முதல் இரவு வரை லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதை முன்னிட்டு தென்காசி தெப்பக்குளத்தில் சிவகாசி சிவ பக்தர்கள் சார்பில் 50 ஆயிரம் பேருக்கு காலை மதியம் மற்றும் இரவு உணவுகள் அந்த இடத்திலேயே சமைத்து பரிமாறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளியூரில் இருந்து அதிகாலையே வந்த பக்தர்களுக்கு பெருமளவு காலை மற்றும் மதிய மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

தென்காசி நகரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அன்னதானம் பக்தர்களுக்கு பேருதவியாக இருந்தது. இதேபோல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தொழிலதிபர் ஆர். கே காளிதாசன் தலைமையில் தென்காசி கூலக்கடை பஜார் தெப்பக்குளம் பெருமாள் கோவில் தெரு பகுதிகளில் சுமார் 10,000 கிலோ எடையுள்ள தர்பூசணிகள் குவிக்கப்பட்டு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

The post தென்காசி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம் அரசுத்துறைகளின் திட்டமிடலால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: