இதற்கு சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பதில் அளித்து பேசியதாவது: முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் நவீன செயற்கை உறுப்புகள் வேண்டி விண்ணப்பிக்கும் பயனாளிகளின் விண்ணப்பங்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட துறையால் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமும் செயற்கை கை, கால் மற்றும் உறுப்புகள் வழங்கப்படுகிறது.
2022-23 முதல் 2024-25 நிதியாண்டு வரை 3,969 நவீன செயற்கை உறுப்புகள் 33 கோடியே 74 லட்சத்து 22 ஆயிரத்து 945 மதிப்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயற்கை உறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்தால் செயற்கை கை, கால் உறுப்புகள் உடனுக்குடன் வழங்கப்படுகிறது: அமைச்சர் கீதாஜீவன் தகவல் appeared first on Dinakaran.