கழுத்தை கவ்வி இழுத்து சென்றது தெரு நாய் கடித்து குதறி சிறுவன் பலி: ஆந்திராவில் பயங்கரம்

திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் ஸ்வர்ண பாரதி நகரைச் சேர்ந்தவர் நாகராஜு. இவரது மனைவி ராணி. நேற்று முன்தினம் நாகராஜு பணிக்கு சென்ற நிலையில், ராணி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது 4 வயது மகன் ஐசக், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த தெரு நாய் ஐசக் மீது பாய்ந்து கடித்து குதறி, கழுத்தை கவ்வி, இழுத்துச் சென்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தெரு நாயை விரட்டியடித்து சிறுவனை ரத்த வெள்ளத்தில் மீட்டனர். உடனடியாக சிறுவனை சிகிச்சைக்காக குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி சிறுவன் ஐசக் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.

The post கழுத்தை கவ்வி இழுத்து சென்றது தெரு நாய் கடித்து குதறி சிறுவன் பலி: ஆந்திராவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: