தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக தேவர் சங்கம் பாராட்டு

பெங்களூரு: தமிழக சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ், கல்வித் தந்தை மூக்கையா தேவருக்கு முழு உருவ வெண்கல சிலை மற்றும் மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக தேவர் சங்க தலைவர் சுப. கனகராஜன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மூன்று கல்லூரிகள் நிறுவிய கல்வித்தந்தை மூக்கையா தேவருக்கு மணி மண்டபம், வெண்கல சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது. தான் இறக்கும் போது ரூ.60 ஆயிரம் கடனில் இருந்த மூக்கையா தேவர், கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்ட போது அதை பாராளுமன்றத்தில் எதிர்த்து குரல் எழுப்பினார். அரசியலில் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரரான அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமை செய்துள்ளார். இதற்காக கர்நாடக மாநில தேவர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.

இது போல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் வசிக்கும் முக்குலத்து சமுதாய மக்களுக்கு அந்தந்த மாநிலங்களில் ஜாதி சான்றிதழ் கிடைப்பதற்கும், மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டும் வகையில் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். சதந்திர போராட்ட வீரர் தேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

The post தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக தேவர் சங்கம் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: