பேரவையில் சுவாரஸ்யமிக்க விவாதம் தீப்பெட்டி தொழில் சிவகாசியா, ஜப்பானா?

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது க.அசோகன் (காங்கிரஸ்) பேசுகையில், ‘‘சிவகாசி தற்போது தீப்பெட்டிக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி கொண்டிருக்கிறது. அந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் தருணத்தில் புவிசார் குறியீடு சான்றிதழை வாங்கி கொடுத்தால் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலுக்கு நன்றாக இருக்கும்

* அமைச்சர் தா.மோ.அன்பரசன் : சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாறு ஆவணங்கள் ஏதுவும் இல்லாத காரணத்தினால், புவிசார் குறியீடு பெறுவதற்கு சிரமமாக இருக்கிறது’’ என்றார்.

* க.அசோகன்: சிவகாசியில் ஸ்பெசல் போர்டல் ஓப்பன் செய்து, அதன் மூலமாக லைசென்ஸ் புதுப்பிக்கப்படுமா?.

* அமைச்சர் தா.மோ.அன்பசரன்: ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 மூலமாக இதுவரை 73,288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 69,595 உரிமங்கள், தடையில்லாச் சான்றுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

* கடம்பூர் ராஜூ (அதிமுக): ஆவணங்களின் அடிப்படையில் தான் நூற்றாண்டு விழாவை சமீபத்தில் சிவகாசியில் சிறப்பாகக் கொண்டாடினார்கள். அதன் தொடர்ச்சியாக கோவில்பட்டியிலேயும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆவணங்களின் அடிப்படையில்தான் நூற்றாண்டு கொண்டாடியிருக்கிறார்கள்.

* சபநாயகர் அப்பாவு: ஜப்பானுக்குச் சென்று அந்த தொழிலை கற்றுக்கொண்டு வந்து ஆரம்பித்தோம் என்று உறுப்பினர் அசோகன் சொல்வார் என்று நினைத்தேன். அவர் சொல்லவில்லை. ஆவணம் இருக்கிறது.

* அமைச்சர் தா.மோ.அன்பரசன்: உறுப்பினர் அந்த ஆவணங்களை முறைப்படுத்தி தருவார் என்று சொன்னால் நிச்சயமாக புவிசார் குறியீடு கிடைப்பதற்கு நம்முடைய அரசு தகுந்த ஏற்பாடுகளைச் செய்யும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

The post பேரவையில் சுவாரஸ்யமிக்க விவாதம் தீப்பெட்டி தொழில் சிவகாசியா, ஜப்பானா? appeared first on Dinakaran.

Related Stories: