கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை; அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

மதுரை: கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைத்து போராட வேண்டியது அவசியம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியுறுத்தியுள்ளார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டையொட்டி கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலமைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்களில் கலந்து கொண்டு பேசிய சி.பி.எம். ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், இந்திய சுதந்திரத்திற்கு பின் எப்போதும் இல்லாத அளவில் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான கடுமையான தாக்குதல்கள் நடந்து கொண்டு இருப்பதாக கூறினார்.

கருத்தரங்கில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் முதன் முறையாக அரசு அமைப்பு சட்டத்திற்கு இவ்வளவு பெரிய ஆபத்து வந்திருப்பதாக கூறினார். மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்டங்களை காரணமே இல்லாமல் ஒன்றிய அரசு கிடப்பில் போடுவது ஜனநாயக விரோத நடவடிக்கை என அவர் குற்றச்சாட்டினார். இந்தியாவின் பன்முக தன்மையை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் சுதாகர் வலியுறுத்தினார். முன்னதாக சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கருத்தரங்கில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

The post கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை; அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: