கடலூரில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை..!!

கடலூர்: கடலூரில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் விஜய் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இரவு விழுப்புரம், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சுமார் 9 பேரை போலீசார் தேடி வந்தனர்.லாரி டிரைவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன்களை கொள்ளை அடித்து சென்றனர். போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்த நிலையில் கடலூர் அருகே உள்ள எம்புதூர் கிராமத்தில் முக்கிய குற்றவாளி மொட்டை விஜய் என்பவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து மொட்டை விஜய்யை போலீசார் பிடிக்க முயன்றனர். அனால் அவர் வீச்சருவாவை எடுத்து இரு போலீசாரை தாக்கி உள்ளார். வீச்சருவா தாக்கியதில் கோபி மற்றும் கணபதி ஆகிய போலீசார் காயமடைந்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசார் மொட்டை விஜய் என்பவரை சுட்டு பிடித்ததில் அவர் உயிரிழந்தார். மேலும், சுட்டு கொல்லப்பட்ட மொட்டை விஜய்யின் மீது கடலூர் மற்றும் புதுச்சேரியில் சுமார் 33க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன நிலையில் அவர் வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். மொட்டை விஜய் என்பவர் இக்கூட்டத்திற்கு தலைவனாக இருந்ததும் தெரியவந்தது. தற்போது அவரது உடல் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு. காயம் அடைந்த போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கடலூரில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: