திண்டுக்கல், ஏப். 2: திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலக குடிமை பொருள் பறக்கும் படை தனி தாசில்தார் சக்தி வேலன், வருவாய் ஆய்வாளர்கள் சண்முகநாதன், மாரிமுத்து ஆகியோர் நாகல் நகர் சந்தை பேட்டை, வேடப்பட்டி, ஆர்.எம்.காலனி பகுதிகளில் உள்ள டீக்கடைகள், பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது கடைகளில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய சிலிண்டரை வியாபார பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது கண்டறிந்தனர். தொடர்ந்து அவ்வாறு பயன்படுத்திய கடைகளில் இருந்து சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடை உரிமையாளர்களிடம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டரை கடைகளில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே கடை உரிமையாளர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை செய்தனர்.
The post திண்டுக்கல்லில் வணிக நிறுவனங்களில் பயன்படுத்திய வீட்டு சிலிண்டர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.
