இலங்கையிடம் படகை பறிகொடுத்த மீனவர்களுக்கு இழப்பீடு? கனிமொழி கேள்வி

புதுடெல்லி: மக்களவையில் நேற்று மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து நடந்த விவாதத்தின் போது ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சனுக்கு, திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்வியில், ‘‘இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட படகுகளை இழந்த மீனவர்களுக்கு, ஒன்றிய மீன்வளத்துறை அல்லது இந்திய அரசு ஏதேனும் இழப்பீடு வழங்குமா?. குறிப்பாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசால் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு ஒன்றிய அரசால் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் வழங்கப்படுமா என்பது குறித்து ஒன்றிய மீன்வளத்துறை அதனை உறுதி செய்யும் விதமான பதிலை தெரிவிக்க வேண்டும் என்றார்.

 

The post இலங்கையிடம் படகை பறிகொடுத்த மீனவர்களுக்கு இழப்பீடு? கனிமொழி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: