ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சம் இழந்த வங்கி மேலாளர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

நாமக்கல்: திருச்சி மாவட்டம், தொட்டியத்தை அடுத்த பிடாரமங்கலம் தேவர்மலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (34). இவர், ஈரோடு மாவட்டம், முத்தூரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். ஜெயக்குமார் ஆன்லைன் விளையாட்டில் கடந்த சில மாதங்களில் ரூ.10 லட்சம் வரை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தனது மனைவியிடம், ரூ.2 லட்சம் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில், நெய்க்காரன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்ற ஜெயக்குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் தடுத்துவிட்டனர். நேற்று மாலை 3 மணியளவில், நெய்க்காரப்பட்டி ரயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றவர், எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

The post ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சம் இழந்த வங்கி மேலாளர் ரயிலில் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: