சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது செல்வபெருந்தகை பேசுகையில் ‘பெரும்புதூர், குன்றத்தூர் நகராட்சி தாமரைக் குளத்தை தூர்வாரிட செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்குமா? என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் நேரு பேசுகையில் “2.17 கோடி மதிப்பில் குன்றத்தூர் தாமரைகுளம் தூர் வாரப்பட்டுள்ளது” என்றார். செல்வ பெருந்தகை: சிக்கராயபுரம் கல் குவாரியில் ஏற்கனவே 1 டிஎம்சி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு சென்று சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நீர்நிலைகளில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?.சிக்கராயபுரம், மணிமங்கலம், ஒரத்தூர் ஏரிகளில் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்படுமா ?
அமைச்சர் கே.என்.நேரு: சிக்கராயபுரம் கல்குவாரியில் மணிமங்கலம், ஒரத்தூர் ஏரிகளில் 40 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புரங்களில் உள்ள ஏரிகள், நீர் நிலைகள் தூர் வார நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செல்வ பெருந்தகை பேசும் போது அமைச்சர் தா.மோ.அன்பரசனை பார்த்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் “என்ன நீங்க தா.மோ.அன்பரசனை பார்த்து பேசிட்டு இருக்கீங்க’’ என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.
The post என்ன நீங்க தா.மோ.அன்பரசனை பார்த்து பேசிட்டு இருக்கீங்க செல்வபெருந்தகையை பார்த்து கேள்வி கேட்ட அமைச்சர் கே.என்.நேரு: சட்டசபையில் சிரிப்பலை appeared first on Dinakaran.