இந்நிலையில் நாசாவுக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள சுனிதா வில்லியம்ஸ் முதன்முறையாக சக வீரர் வில்மோருடன் இணைந்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு முறை நாங்கள் இமயமலை மேலே பயணித்தபோதும் புட்ச் வில்மோர் சில அற்புதமான புகைப்படங்களை எடுத்தார். இமயமலை இந்தியாவுக்குள் வழிந்தோடுவதுபோல் ஒரு வியத்தகு காட்சியைத் கண்டு கழித்தோம். இந்தியாவை விண்வெளியில் இருந்து பார்க்கும் போது மும்பையில் இருந்து குஜராத் வரை இரவில் ஒளிர்ந்த மின் விளக்குகள் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தன.
ஒரு நாள் நான் எனது தந்தையின் சொந்த நாட்டுக்கு வர விரும்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த நாடு. அற்புதமான ஜனநாயகம் கொண்ட நாடு என தெரிவித்துள்ளார். மேலும் ஆக்சியம் மிஷனுடன் இணைந்து விண்வெளிக்குச் செல்லவிருக்கும் இந்திய வீரரை நினைத்து நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது. எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்று சுனிதா வில்லியம்ஸ் பேட்டியளித்தார்.
The post விண்வெளியில் கழித்த நாட்களை பற்றி இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் பேட்டி appeared first on Dinakaran.