விசாரணையில், அவர் கடந்த பிப்.16ம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட அவரை முறையான விசா இல்லாததால், அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் பயணத்தை ரத்து செய்து திருப்பி அனுப்பியுள்ளனர். பின் அவர் அங்கிருந்து பாங்காங் சென்று, அங்கிருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். நேபாளத்திலிருந்து கும்பமேளாவிற்கு சென்ற சாதுக்களுடன் கலந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்று கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அங்கிருந்து ரயில் மற்றும் பஸ் மூலமாக கன்னியாகுமரி சென்று விட்டு ராமேஸ்வரம் வந்துள்ளார். தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கை செல்லும் திட்டத்துடன் அவர் ராமேஸ்வரம் வந்திறங்கியது விசாரணையில் தெரியவந்தது.
ஒன்றிய, மாநில புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பின் தனுஷ்கோடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் லூசிபர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் இரவு புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஒரு மாதமாக சுற்றியவர் ராமேஸ்வரத்தில் சிக்கினார்; விசா இல்லாமல் இந்தியாவிற்கு விசிட் அடித்த அமெரிக்கர் கைது appeared first on Dinakaran.