சிரியாவில் புதிய அரசு பதவியேற்பு

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசு படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. இந்த மோதலில் நாட்டின் தலைநகர் உள்பட பல முக்கிய நகரங்களை போராளிகள் கடந்த டிசம்பர் மாதம் கைப்பற்றினர். இதையடுத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்தது. நாட்டில் இருந்து விமானத்தில் தப்பி சென்ற அவர் ரஷ்யாவுக்கு சென்றதாக கூறப்பட்டது. இதையடுத்து அகமது அல் ஷாரா இடைக்கால அதிபராக பதவியேற்றார்.

இந்த நிலையில் பஷர் அல் ஆசாத் பதவியில் இருந்து அகற்றப்பட்டு 4 மாதங்கள் கழித்து புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் பதவியேற்றுள்ளது. தற்காலிக அரசியல் சட்ட அமைப்பின்படி அமைச்சரவையில் பிரதமர் பதவி ஏற்படுத்தப்படவில்லை.ஆனால் பொது செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது.மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் பல மதங்கள், இனங்களை சார்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

The post சிரியாவில் புதிய அரசு பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: