இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்த களப்பால் அருகே சீலத்தநல்லூர் கிராமத்தில் ரவி என்பவர் வயலில் தனக்கு சொந்தமான 230 செம்மறி ஆடுகளை தாமரைச்செல்வன் கிடை போட்டு இருந்தார்.பகல் நேரங்களில் வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு ஒட்டி சென்று இரவு நேரங்களில் ஆடுகளை கிடையில் பாதுகாப்பாக வைப்பது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கிடையில் ஆடுகளை அடைத்துவிட்டு தாமரைச்செல்வன் மற்றும் பணியாளர்கள் கடைவீதிக்கு சாப்பிட சென்றனர்.
பின்னர், கிடைக்கு வந்தபோது ஏராளமான ஆடுகள் பலத்த ரத்த காயங்களுடன் கத்தி கொண்டு இருந்தன. கிடையில் இருந்த ஆடுகளை அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறிநாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் தோல் கிழிந்து குடல் வெளியே வந்த நிலையிலும் ஆங்காங்கே விழுந்து கிடந்தன. மேலும், 11 ஆடுகள் உயிர் போகும் நிலையில் துடித்துக் கொண்டும் கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வயலுக்குள் ஆட்கள் வருவதை பார்த்து ஆடுகளை கடித்துக் கொண்டிருந்த நாய்கள் அனைத்தும் ஓடி விட்டது.
தான் கடன் வாங்கி ஆட்டுக்குட்டிகளாக வாங்கி வளர்த்த ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொன்று விட்டதே இனி எப்படி கடனை கட்டுவேன் என்று தாமரைச்செல்வன் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. தகவல் அறிந்து கால்நடை மருத்துவர் நெப்போலியன் தலைமையிலான குழுவினர் இறந்த ஆடுகளுக்கு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார். இது தொடர்பாக தாமரைச்செல்வன் களப்பால் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மன்னார்குடி அருகே வெறி நாய்கள் கடித்து 11 ஆடுகள் பரிதாப பலி appeared first on Dinakaran.