‘அவர் புத்திசாலி, நல்ல நண்பர்’ பிரதமர் மோடியை புகழ்ந்த டிரம்ப்: 3 நாளில் பரஸ்பர வரி அமல்?

நியூயார்க்: பிரதமர் மோடியை புத்திச்சாலி என்றும் நல்ல நண்பர் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ந்துள்ளார். அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா அதிக வரிவிதிப்பதை அதிபர் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரி அவர்களுக்கும் விதிக்கும் வகையில் பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்த டிரம்ப், அவை வரும் 2ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். 50 சதவீத அமெரிக்க பொருட்களுக்கு வரியை குறைக்கஇந்தியா தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் கிறிஸ்டோபர் லான்டாவ் சந்திப்புக்கு மத்தியில் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், ‘‘உலகிலேயே மிக அதிகமான வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது கொடுமையானது. ஆனால் அவர்கள் புத்திசாலிகள். இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்து என்னை சந்தித்தார். அவர் நல்ல புத்திசாலி, எனக்கு எப்போதும் நல்ல நண்பரும் கூட. எங்களது பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது. இது இரு நாடுகளுக்கும் இடையே நல்ல விஷயங்களை கொண்டு வரும் என நம்புகிறேன்’’ என்றார்.

பரஸ்பர வரி விதிப்புக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடியை டிரம்ப் புகழ்ந்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது.

The post ‘அவர் புத்திசாலி, நல்ல நண்பர்’ பிரதமர் மோடியை புகழ்ந்த டிரம்ப்: 3 நாளில் பரஸ்பர வரி அமல்? appeared first on Dinakaran.

Related Stories: