சேந்தமங்கலம், மார்ச் 30: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம் கல்குறிச்சி தேவேந்திரர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் அஜித் (26). அதே பகுதியைச் சேர்ந்தவர் மற்றொரு பெரியசாமி மகன் தென்னரசு (23). இருவர் மீதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷனில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருவரும் பிணையில் வெளியே வந்துள்ளனர். நேற்று கல்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் கத்தியை காட்டி, அவ்வழியாக செல்பவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்தார். பின்னர், வழிப்பறி வழக்கு பதிவு செய்து, ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
The post கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.