சென்னை: கோயில் விழாக்களில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பக்தர்கள், உபயதாரர்கள் அல்லது ஊர் பொதுமக்கள் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.