தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் ஏப்.6ல் கருப்புக் கொடி போராட்டம்

பாம்பன்: தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கானாமல் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடிக்கு வருகை தந்தால் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 2014 ஆண்டு முதல் 2025 தற்போதைய மார்ச் மாதம் வரையிலும் 10 ஆண்டுகளில் 480 படகுகள் கைப்பற்றப்பட்டு 3,800 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரையிலுமான மூன்று மாதத்தில் மட்டும் 21 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு 159 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களை விட, தற்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளதுடன், மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் தொடர்கிறது. பிரதமர் மோடியின் பலவீனமான பாஜக அரசினால் தான் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக மீனவர்களுக்கு அபராதமும், படகுகளை நாட்டுடமையாக்கும் சட்டமும் கடந்த 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் 185 படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் நாட்டுடமையாக்கி உள்ளன. நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து விறகுகளாகவும், இயந்திரங்களை பழைய இரும்பு கடைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. ஆனால் கடந்த 11 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக ஆட்சியில் கடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தல்களிள் அளிக்கப்பட்ட மீனவர் நலனுக்கன தனி அமைச்சரகம், மீன்பிடி தொழிலை, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றி, இந்திய நாட்டில் வாழும் பாரம்பரிய மீனவ சமுதாயத்தை பழங்குடியினராக அங்கீகத்தல்,புயல், பெருமழை, சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் போது விவசாயிகளின் வங்கி கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்யும் போது மீனவர்களின் தொழில் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை மீறி முற்றிலும் மாறான நிலைப்பாடை மேற்கொண்டு வந்நதால் தான் கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் கடந்த பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மீனவர்கள் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 4 அன்று இலங்கை செல்லும் பிரதமர் மோடி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுசசேரி மாநில மீனவர்களை விடுதலை செய்யவும், கைப்பற்றப்பட்ட மீனவர்கள் படகுகளை நிபந்தனையின்றி விடுவிக்கவும், இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை நடத்திடவும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை பிரதமர் மோடியும், ஒன்றிய அரசும் நிறைவேற்றி தராதபட்சத்தில், புதிய பாம்பன் பாலத்தை திறப்பதற்காக ராமேஸ்வரத்திற்கு ஏப்ரல் 6-ம் தேதி வருகை தரும், பிரதமர் மோடியை கண்டித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பாக எனது தலைமையில் மீனவர்களை திரட்டி கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அகில இந்திய மீனவர் காங்கிரஸ், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் ஏப்.6ல் கருப்புக் கொடி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: