மகாலை அசுத்தம் செய்தால் அபராதம்

 

மதுரை, மார்ச் 29: மதுரை மாநகரின் பாரம்பரிய அடையாள சின்னங்களில் ஒன்றாக திருமலை நாயக்கர் மகால் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மகாலை பார்வையிட நாளொன்றுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். மகாலின் பல இடங்கள் சிதிலமடைந்து இருந்ததால், புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன்படி தர்பார் அரங்கில் தூண்களின் அருகிலேயே ஒலி, ஒளி காட்சிகள் அமைப்பது, மகால் முழுவதும் புதுப்பிப்பது, உள்பகுதியில் உள்ள நாடக சாலை, பள்ளியறையை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன.

புதுப்பிக்கும் பணிகள் முடிந்ததும், மகாலின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி இங்கு வரும் பார்வையாளர்கள் அங்குள்ள தூண்களிலோ, சுவர்களிலோ கிறுக்குவது, பெயர் எழுதுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை கண்காணிக்க மகால் முழுவதும் கூடுதலாக சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மகாலை அசுத்தம் செய்தால் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: