திண்டுக்கல்லில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மார்ச் 29: திண்டுக்கல் யூனியன் அலுவலகம் அருகே அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். துணை தலைவர்கள் பாக்கியலட்சுமி, சித்திரக்கலை, துரைராஜ், சுப்புராம் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி, வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி, பல்வேறு சங்க நிர்வாகிகள் ஜெயசீலன், ஜெஸி, விஜயகுமார், அருண் பிரசாத் உட்பட பலர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். அகவிலைப்படி, மருத்துவ படி, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் சாரதா நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: