நிலத்தகராறில் கோஷ்டி மோதல்: 4 பேர் படுகாயம்

மரக்காணம், மார்ச் 29: மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா(44). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மஞ்சுளா அவரது நிலத்தில் மணிலா காய வைத்துக் கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் மோட்டாரில் இருந்து தண்ணீர் மஞ்சுளா காய வைத்திருந்த மணிலாவில் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரது உறவினர்களும் கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் இரண்டு கோஷ்டிகளையும் சேர்ந்த விஜயகுமார், தேவநாதன், மணிகண்டன், தேவராஜ் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன், துளிர் வேந்தன், தேவராஜ், துளசிராமன் ஆகியோர் மீதும், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தேவநாதன், ஏழுமலை, விஜயகுமார், சிவா ஆகியோர் மீதும் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நிலத்தகராறில் கோஷ்டி மோதல்: 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: