மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை திருக்கோவிலூர் கோர்ட் தீர்ப்பு

திருக்கோவிலூர், மார்ச் 29: மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருக்கோவிலூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைசேர்ந்தவர் ரங்கராஜன் மகன் பாரதிராஜா(23). இவருக்கும், கீழ்பென்னாத்தூரை சேர்ந்த செல்வராஜ் மகள் தேவி(21) என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு மாதத்திற்கு பிறகு கணவர் பாரதிராஜா, மாமியார் தேவகி அம்மாள் ஆகியோர் வரதட்சணை கேட்டு தேவியை கொடுமைப்படுத்தியதாகவும், மேலும் வேறு ஒரு பெண்ணை பாரதிராஜா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் வெங்கடேஷ்குமார் இந்த வழக்கை விசாரித்து மனைவியை கொடுமைப்படுத்திய பாரதிராஜாவுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். எஞ்சியவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

The post மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை திருக்கோவிலூர் கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: