பைக் மீது கார் மோதி பிளஸ்2 மாணவன் பலி

வானூர், மார்ச் 29: திண்டிவனம் உமர் ஷாகிப் தெரு பகுதியில் வசித்தனர் அப்துல் ஆசிப் (வயது 17), திண்டிவனம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த இவர் தற்போது பொதுத்தேர்வு எழுதியுள்ளார். சம்பவத்தன்று இவர் அந்தப் பகுதியில் உள்ள நண்பர்களை பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளனர். நண்பர்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து மீண்டும் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இறையனூர் அருகே வந்தபாது முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருப்பதற்காக தனது பைக்கில் பிரேக் போட்டுள்ளார்.

அப்போது பின்னால் வந்த கார், அப்துல் ஆசிப் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட அப்துல் ஆசிப் பலத்த காயம் அடைந்தார் . அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அவருடைய தாய் யாசின் கொடுத்த புகாரின்பேரில் கிளியனூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் இந்த விபத்து நடந்த அதே திசையில் பின்னால் இருசக்கர வாகனத்தில் அதே பள்ளியை சேர்ந்த மாணவர்களை அழைத்து வந்த திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஆயிஷா பர்வீன் (31), அவருடைய மகன்கள் முகமது வியாஸ் (14), ஜாஸ்மின் சுல்தான் (11) ஆகிய 3 பேர் விபத்தில் சிக்கி லேசான காயத்துடன் தப்பித்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்தும் கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது கார் மோதி பிளஸ்2 மாணவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: