நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் யுகாதி விழா

நாமக்கல், மார்ச் 29: நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கத்தின் சார்பில் யுகாதி எனும் தெலுங்கு வருடப்பிறப்பு விழா, நாளை (30ம் தேதி) எஸ்.பி.எஸ் திருமண மண்டபத்தில் நடக்கிறது. காலை 8 மணிக்கு சங்க நிறுவனர் ஜெயராமுலு நாயுடுவின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. பின்னர் நாயுடு சமூக மணமாலை நடைபெறும். பகல் 11 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 95 கிளை சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு சிறுவர் சிறுமியருக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி. மகளிருக்கான கோலப்போட்டி நடைபெறுகிறது. மேலும், கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை மாவட்ட நாயுடுகள் நலச்சங்க செயலாளர் நாராயணன், பொருளாளர் தங்கவேல் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

The post நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் யுகாதி விழா appeared first on Dinakaran.

Related Stories: