சென்னை, மார்ச் 28: சென்னையில் 4 சிறுபான்மை கல்லூரிகளில், பல்கலை மானிய குழுவின் விதிகளுக்கு முரணாக தேர்வு குழு அமைக்காமல், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி 66 உதவி பேராசிரியர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குகளை விசாரித்த நீதிபதிஆனந்த் வெங்கடேஷ், பல்கலை மானிய குழுவின் விதிமுறைகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு விதிமுறைகளையும் எதிர்த்து வழக்கு தொடர வேண்டிய அவசியமில்லை. 66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்து 4 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post உதவி ேபராசிரியர் நியமன தேர்வு குழு சிறுபான்மை கல்லூரிகளுக்கு பொருந்தாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.