இப்பள்ளியை சேர்ந்த 101 மாணவர்கள், நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். நேற்று முன்தினம் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவடைந்தது. பள்ளியில் இறுதி தேர்வு முடிந்ததும், பிளஸ்2 மாணவர்கள் சிலர், பள்ளி வகுப்பறையில் உள்ள மின்விசிறி, இரும்பு இருக்கைகள், டேபிள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து, நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும், தலைமை ஆசிரியர் அறையில் உள்ள கை கழுவும் குழாயை உடைத்துள்ளனர்.
இதனால் தலைமையாசிரியர் அறை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து, அறையில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் எழுதிய தேர்வு தாள்கள் மற்றும் பொருட்கள் முழுமையாக நனைந்து வீணானது. இதில் சில பேப்பர்களை மீட்டு எடுத்து, பள்ளி வளாகத்தில் வெயிலில் காயவைத்தனர். பிளஸ்2 தேர்வு எழுதி வெளியே செல்லும் மாணவர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post அரசு பள்ளி வகுப்பறையை சூறையாடிய மாணவர்கள்: சேலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.