இந்த ஆலோசனை கூட்டம் குறித்து, ராமேஸ்வரம் மீனவ பிரதிநிதி சேசுராஜா, யாழ்ப்பாணம் மாவட்ட அன்னராசா, மன்னார் மாவட்ட மீனவ பிரதிநிதி ஆலம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘‘2016ம் ஆண்டு டெல்லியில் கடைசியாக நடைபெற்ற இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தையின்போது எட்டப்பட்ட முடிவுகள் எதுவுமே, கடந்த 9 ஆண்டுகளில் இருநாட்டு அரசும் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் இரு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவ பிரச்னைகளை இரு நாட்டு அரசுகளும் மனிதாபிமான முறையில் அணுக வேண்டும்.
நிரந்தர தீர்வு காண்பதற்கு உடனடியாக இரு நாட்டு அரசும் ஒருங்கிணைந்து விரைவில் பேச்சுவார்த்தை விரைவில் நடத்த வேண்டும். முதற்கட்டமாக இரு நாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்து, அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும்’’ என்றனர். மேலும் கூட்டத்தில் ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் கச்சத்தீவை மீட்பது எங்களது எண்ணம் அல்ல. இழுவை வலை மூலம் மீன் பிடிப்பதை படிப்படியாக நிறுத்துவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
The post மீனவர்கள் பிரச்னைக்கு இந்திய-இலங்கை அரசுகள் பேசி தீர்வு காண வேண்டும் : ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.