ஒரே டூவீலரில் பயணம் செய்த 3 பேருக்கு பைன்

நாமக்கல், மார்ச் 26:நாமக்கல் கலெக்டர் உமா, பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல் வந்த போது, டூவீலரில் 3 பேர் செல்வதை பார்த்தார். இதுபற்றி அவர், நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசனிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார். இதையடுத்து, அந்த வாகனத்தை பரமத்திவேலூர் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியது மற்றும் 3 பேர் பயணம் செய்தது போன்ற குற்றங்களுக்காக ₹2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. டூவீலரின் வந்தவர்களை போலீசார் எச்சரித்து வாகனத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து, இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

The post ஒரே டூவீலரில் பயணம் செய்த 3 பேருக்கு பைன் appeared first on Dinakaran.

Related Stories: