மங்கலம்பேட்டை, மார்ச் 26: கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-மங்கலம்பேட்டை நெடுஞ்சாலையோரம் விஜயமாநகரம் கிராமத்தில் மதுரை வீரன் கோயில் மற்றும் கோ.பூவனூர் மின்வாரிய அலுவலகம் அருகே ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. நேற்று காலை இந்த கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர. மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவில் அவ்வழியே சென்ற மர்ம நபர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிய வந்தது. இதுதொடர்பாக அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் விருத்தாசலம் மந்தாரக்குப்பம் நெடுஞ்சாலையோரம், ஊ.மங்கலம் கிராமத்தில் உள்ள இரண்டு கோயில்களிலும் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்தும் ஊமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் ஊமங்கலம் பகுதியிலும், மங்கலம்பேட்டை பகுதியிலும் கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post விருத்தாசலம் அருகே 4 கோயில்களில் உண்டியல் உடைத்து திருட்டு appeared first on Dinakaran.