இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கபட்டவர்கள் தரப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். பாதிக்கபட்ட அனைவரும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவர்கள்.
தேவநாதன் யாதவ் அரசியல் பின்புலம் மற்றும் பண பலம் கொண்டவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, விசாரணைக்கு மனுதாரர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தேவநாத யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது குறித்து தேவநாதன் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post மயிலாப்பூர் பண்ட் நிதி மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்துக்களை ஏலம் விட்டு பணத்தை வழங்கலாமா? தேவநாதன் யாதவ் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.