பொதுத்தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம் பள்ளி ஆசிரியர் கைது

திருப்பூர்: திருப்பூர் அம்மாபாளையம் அடுத்த பழனியப்பா நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (32). அம்மாபாளையத்திலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர். இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக வெங்கமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு அறையில் பணியாற்றினார். நேற்று அவர் பணியாற்றிய அறையில் 11 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். இதில் 6 மாணவிகளிடம் தேர்வுத்தாளை சரிபார்ப்பதுபோல ஆசிரியர் சம்பத்குமார் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள், பெற்றோரிடமும், பள்ளி ஆசிரியரிடமும் கூறியுள்ளனர். தகவலறிந்த அனுப்பர்பாளையம் சரக உதவி கமிஷனர் பிரதீப்குமார் பள்ளிக்கு வந்து சம்பத்குமாரை பிடித்து விசாரணை நடத்தினார். 6 மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர் சம்பத்குமார் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து சம்பத்குமாரை கைது செய்தனர்.

The post பொதுத்தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம் பள்ளி ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: