இந்நிலையில், திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்ட சிவா என்பவர் தம்முடைய குழுவினரோடு சேர்ந்து நேற்று இரவு வெள்ளியங்கிரி மலைக்கு சென்று இருக்கிறார். அங்கு சுயம்புலிங்க சாமியை தரிசனம் செய்து விட்டு, காலையில் மலையில் இருந்து கீழே இறங்கிய போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். அவரை வனத்துறையினர் கீழே கொண்டு வந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். பின்னர் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய பிரச்சனை காரணமாக ஆஞ்சியோ செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post கோவை வெள்ளியங்கிரி மலை மீது ஏறி தரிசனம் செய்துவிட்டு கீழிறங்கிய பக்தர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
