திருமங்கலம், மார்ச் 25: உரப்பனூர் விஏஓ முத்துபாண்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமங்கலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமங்கலத்தில் உரப்பனூர் விஏஓ முத்துபாண்டியை படுகொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், நெல்லையில் 12ம் வகுப்பு மாணவர் மீது தாக்குதல், சிவகங்கையில் புல்லட் ஓட்டிய வாலிபர் மீதான தாக்குதல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று திருமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்குள்ள ராஜாஜி சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் கலைசெல்வன், மாவட்ட பொருளாளர் அகிலன், சிந்தனைவளவன், மாரியப்பன், ஆற்றலரசு, எல்லாளன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post விஏஓ கொலையை கண்டித்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் திருமங்கலத்தில் நடந்தது appeared first on Dinakaran.