டப்பிங் பணிகளை தொடங்கிய மாவீரன்

பிரின்ஸ் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழை போல் தெலுங்கிலும் மாவீரன் என்ற பெயரிலும் வருகின்ற ஜூலை 11 அன்று இப்படம் வெளியாகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றனர். படக்குழுவினர் டப்பிங் பேசி வருகிறனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளதை படக்குழுவினர்கள் வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.

The post டப்பிங் பணிகளை தொடங்கிய மாவீரன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: