சபாநாயகர் அப்பாவு: அது சப்ஜெக்ட் அல்ல. மானியக் கோரிக்கையில் பேசுங்கள்.
எடப்பாடி பழனிசாமி: கர்நாடகா, கேரளாவில் இருந்து தான் நமக்கு நீர் கிடைக்க வேண்டும். இதுவெல்லாம் நீதிமன்றத்தில் வழக்காக இருந்து கொண்டிருக்கிறது. இப்போது அம்மாநில முதல்வர்கள் இங்கு வந்துள்ளனர். இதை பயன்படுத்தினால் நல்ல வாய்ப்பாக இருக்கும்.
அமைச்சர் துரை முருகன்: நீங்கள் முதல்வராக இருந்த போது, அண்டை மாநில முதல்வர்கள் எல்லாம் உங்களுடன் விரோதியாக சண்டை போட்டார்களா? அப்போது ஏன் நீங்கள் தீர்க்கவில்லை?.
ஆர்.பி.உதயக்குமார்: தென்காசி, கன்னியாகுமரி, கோவை உள்பட பகுதியில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் கனிம வளங்களுடன் அண்டை மாநிலத்திற்கு சென்ற வண்ணம் இருக்கிறது. மக்களும் தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். கனிம வளங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: ஏதோ நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் லாரிகள் சென்று கொண்டிருப்பது போல உறுப்பினர் பேசுகிறார். நீங்கள் ஆட்சியில் இருக்கும்போதும் இப்படி தான் நடந்தது.
ஆர்.பி.உதயகுமார்: சட்ட விரோதமாக கனிம வளங்கள் எடுத்து செல்லப்படுவதை நான் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
அமைச்சர் துரைமுருகன்: புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
The post கனிமவள கடத்தல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை appeared first on Dinakaran.