திருவனந்தபுரம்: கேரள பாஜ மாநில தலைவராக முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று பொறுப்பேற்றார். கேரள பாஜ மாநில தலைவராக இருந்த சுரேந்திரனின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பான பாஜ மையக்குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் புதிய தலைவர் பதவிக்கு பாஜ தேசிய தலைமையின் சார்பில் முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் ராஜீவ் சந்திரசேகர் மட்டுமே தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று பாஜ மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தலைவராக ராஜீவ் சந்திரசேகரின் பெயர் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அதிகாரியான பிரஹ்லாத் ஜோஷி ராஜீவ் சந்திரசேகரின் பெயரை அறிவித்தார். தொடர்ந்து ராஜீவ் சந்திரசேகர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பாஜ தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post கேரள பாஜ மாநில தலைவராக ராஜீவ் சந்திரசேகர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.