சென்னை: சைக்கிள் பஞ்சர் கடையில் வேலை பார்த்த மாணவியை நர்சிங் படிக்க வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் தேவசங்கரி. இவர், பிளஸ் 2 முடித்ததும் நர்சிங் படிக்க விரும்பினார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை. இதையடுத்து சைக்கிள் பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரை பற்றிய தகவல் சமூகவலைத்தளத்தில் பரவியது.இதுபற்றி அறிந்த சிவகார்த்திகேயன், விசாரித்துள்ளார். பிறகு, தேவசங்கரியிடம் பேசியிருக்கிறார். அப்போது அவர், நர்சிங் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் வகுப்பில் சிவகார்த்திகேயன் அவரை சேர்த்திருக்கிறார். இதுபற்றி தேவசங்கரி கூறும்போது, ‘சிவகார்த்திகேயன் அண்ணன் தயவில் நர்சிங் வகுப்பில் சேர்ந்துவிட்டேன். சமீபத்தில் பொங்கலுக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் புது துணியும் அவர் எடுத்து கொடுத்தார்’ என்றார்….
The post ஏழை மாணவியை படிக்க வைத்த சிவகார்த்திகேயன் appeared first on Dinakaran.